2-வது டெஸ்டில் ‘பேட்டிங்’ ஆடுகளம்

0
20

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 140 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை வகிக்​கும் நிலை​யில் 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்​லி​யில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்​தில் வரும் 10-ம் தேதி தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்த போட்​டிக்​கான ஆடு​களம் பேட்​டிங்​கிற்கு சாதக​மாக அமையக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

அகம​தா​பாத்​தில் இருந்​ததை போன்று டெல்லி ஆடு​களத்​தில் புற்​கள் சீராக இல்​லை. ஒரு சில பகு​தி​களில் மட்​டுமே புற்​கள் உள்​ளன. மேலும் ஆடு​களத்​தின் அடிப்​பகுதி கருப்பு மண் கொண்டு தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. பொது​வாக கருப்பு மண் கொண்டு செய்​யப்​படும் ஆடு​களங்​கள் பேட்​ஸ்​மேன்​களுக்கு சாதக​மாகவே இருக்​கும். மேலும் ஆடு​களம் உலரத் தொடங்​கும் போது சுழற்​பந்து வீச்​சுக்கு கைகொடுக்​கும்.

விரைவான அவுட் பீல்டு: முதல் டெஸ்ட் போட்டி நடை​பெற்ற அகம​தா​பாத் ஆடு​களம் சிவப்பு மண் கொண்டு தயார் செய்​யப்​பட்டு இருந்​தது. மேலும் ஆடு​களத்​தில் புற்​கள் நான்கு மில்லி மீட்​டர் உயரம் வரை இருந்​த​தால் பந்​துகள் நன்கு பவுன்​ஸாகின. இந்த போட்​டி​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் இன்​னிங்ஸில் 44.1 ஓவர்​களும், 2-வது இன்​னிங்​ஸில் 45.1 ஓவர்​கள் மட்​டுமே தாக்கு பிடித்​தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்​தின் அவுட் பீல்டு விரை​வாக இருக்​கும். மேலும் எல்​லைக்​கோட்​டின் தூர​மும் சற்று குறைவு. இதனால் பேட்​ஸ்​மேன்​கள் ரன் மழை பொழியக்​கூடும். கடைசி​யாக இங்கு 2023-ம்ஆண்டு நடைபெற்ற பார்​டர்​-க​வாஸ்​கர் டிராபி​யில் இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் மோதி​யிருந்​தன. 3 நாட்​களில் முடிவடைந்த இந்த போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில்​ தோல்​வி கண்​டிருந்​தது.மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 140 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை வகிக்​கும் நிலை​யில் 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்​லி​யில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்​தில் வரும் 10-ம் தேதி தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்த போட்​டிக்​கான ஆடு​களம் பேட்​டிங்​கிற்கு சாதக​மாக அமையக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

அகம​தா​பாத்​தில் இருந்​ததை போன்று டெல்லி ஆடு​களத்​தில் புற்​கள் சீராக இல்​லை. ஒரு சில பகு​தி​களில் மட்​டுமே புற்​கள் உள்​ளன. மேலும் ஆடு​களத்​தின் அடிப்​பகுதி கருப்பு மண் கொண்டு தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. பொது​வாக கருப்பு மண் கொண்டு செய்​யப்​படும் ஆடு​களங்​கள் பேட்​ஸ்​மேன்​களுக்கு சாதக​மாகவே இருக்​கும். மேலும் ஆடு​களம் உலரத் தொடங்​கும் போது சுழற்​பந்து வீச்​சுக்கு கைகொடுக்​கும்.

விரைவான அவுட் பீல்டு: முதல் டெஸ்ட் போட்டி நடை​பெற்ற அகம​தா​பாத் ஆடு​களம் சிவப்பு மண் கொண்டு தயார் செய்​யப்​பட்டு இருந்​தது. மேலும் ஆடு​களத்​தில் புற்​கள் நான்கு மில்லி மீட்​டர் உயரம் வரை இருந்​த​தால் பந்​துகள் நன்கு பவுன்​ஸாகின. இந்த போட்​டி​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் இன்​னிங்ஸில் 44.1 ஓவர்​களும், 2-வது இன்​னிங்​ஸில் 45.1 ஓவர்​கள் மட்​டுமே தாக்கு பிடித்​தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்​தின் அவுட் பீல்டு விரை​வாக இருக்​கும். மேலும் எல்​லைக்​கோட்​டின் தூர​மும் சற்று குறைவு. இதனால் பேட்​ஸ்​மேன்​கள் ரன் மழை பொழியக்​கூடும். கடைசி​யாக இங்கு 2023-ம்ஆண்டு நடைபெற்ற பார்​டர்​-க​வாஸ்​கர் டிராபி​யில் இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் மோதி​யிருந்​தன. 3 நாட்​களில் முடிவடைந்த இந்த போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில்​ தோல்​வி கண்​டிருந்​தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here