தேர்தல் காலங்களில் வங்கியில் எடுக்கும் பணத்துக்கு வங்கி மேலாளர் சான்றிதழ் வழங்க வேண்டும்

0
16

தேர்தல் காலங்​களில் வங்​கி​யில் எடுக்​கும் பணத்​துக்கு அதன் மேலா​ளர் சான்​றிதழ் வழங்க வங்​கி​களுக்கு வழி​காட்​டு​தல் வெளி​யிட ரிசர்வ் வங்கி கவர்​னருக்கு, தமிழக வணி​கர் சங்​கங்​களின் பேர​வைத் தலை​வர் எஸ்​.சவுந்​தர்​ராஜன் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

​கடிதத்​தில் அவர் தெரி​வித்​துள்​ள​தாவது: தேர்தல் காலங்​களில் சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை செய்​யப்​படு​வதைத் தடுக்​கும் நோக்​கில், தேர்தல் ஆணை​யம்,கண்​காணிப்​புக் குழுக்​கள் பல்​வேறு இடங்​களில் தீவிர சோதனை​களை மேற்​கொண்டு வரு​கின்​றன.

தினசரி வணிக நடவடிக்​கைகளுக்​காக வங்​கி​களி​லிருந்து பணம் எடுத்து பயன்​படுத்​தும் உண்​மை​யான வணி​கர்​கள் பல இடங்​களில் சிக்​கல்​களைச் சந்​திக்​கின்​றனர்.

பொருட்​களை வாங்​குதல், தொழிலா​ளர்​களுக்கு கூலி வழங்​குதல், சப்​ளை​யர்​களுக்கு பணம் செலுத்​துதல் போன்ற வணிக தேவை​களுக்​காக, வங்​கி​களி​லிருந்து பணம் எடுத்​துச் செல்​லும் போது, தேர்தல் கால சோதனை​களில் அந்த பணத்​தின் மூலத்தை நிரூ​பிக்க வேண்​டிய நிலை ஏற்​படு​கிறது.

எனவே, தேர்தல் காலங்​களில் வணி​கர்​கள் தங்​கள் வங்​கிக் கணக்​கு​களில் இருந்து பணம் எடுக்​கும்​போது, அந்த பணம் சம்​பந்​தப்​பட்ட கணக்​கி​லிருந்து எடுக்​கப்​பட்​ட​தாக​வும், அது வணிக தேவை​களுக்​கான​தாக​வும் உறுதி செய்​யும் வகை​யில், சம்​பந்​தப்​பட்ட வங்கி மேலா​ளர் மூலம் எளிய சான்​றிதழ் வழங்க அனைத்து வங்​கி​களுக்கும் இந்​திய ரிசர்வ் வங்கி வழி​காட்​டு​தல் வழங்க வேண்​டும்.

எனவே, எங்​களின் இக்​கோரிக்​கையை கருணை​யுடன் பரிசீலித்து தேவை​யான வழி​காட்​டு​தல்​களை அனைத்து வங்கிகளுக்கும் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here