Home மாநில செய்திகள் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: தொடர் விடுமுறையால் வங்கி சேவைகள் 4 நாட்கள் பாதிக்கும்

வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: தொடர் விடுமுறையால் வங்கி சேவைகள் 4 நாட்கள் பாதிக்கும்

0

​வாரத்​தில் 5 நாட்​கள் வேலை என்​பது உள்​ளிட்ட கோரிக்​கை​களை வலி​யுறுத்​தி, வங்கி ஊழியர்​கள் இன்று நாடு தழு​விய வேலைநிறுத்​தத்​தில் ஈடு​படு​கின்​ற​னர்.

இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அகில இந்​திய வங்கி ஊழியர்​கள் சங்க பொதுச் செய​லா​ள​ரும், வங்கி ஊழியர் சங்​கங்​களின் ஐக்​கிய மன்ற ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சி.எச்​.வெங்​க​டாச்​சலம் கூறிய​தாவது: கடந்த 2024 மார்ச்​சில் கையெழுத்​தான இருதரப்பு ஒப்​பந்​தத்​தில், வாரத்​தின் அனைத்து சனிக்​கிழமை​களை​யும் விடு​முறை​யாக அறிவிக்க வங்கி நிர்​வாகங்​கள் சம்​ம​தித்​தன.

இதற்​காக, திங்​கள் முதல் வெள்ளி வரை தினசரி வேலை நேரத்தை வாடிக்​கை​யாளர் சேவைக்​காக 40 நிமிடங்​கள் அதி​கரிக்​க​வும் ஊழியர்​கள் ஒப்​புக்​கொண்​டனர். இந்த ஒப்​பந்​தம் மத்​திய நிதி அமைச்சக ஒப்​புதலுக்​காக அனுப்​பப்​பட்டு இரண்​டரை ஆண்​டு​கள் ஆகி​யும் நிலு​வை​யில் உள்​ளது.

எனவே, வாரம் 5 நாட்கள் வேலை​முறையை நடை​முறைப்​படுத்த வேண்​டும். ஒப்​புக்​கொண்​டபடி, அனைத்து சனிக்​கிழமை​யும் விடு​முறை அளிக்க வேண்​டும். இதுத​விர, புதி​தாக பணிக்​குச் சேர்ந்த ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும்.

ஓய்​வு​பெற்ற மூத்த குடிமக்​களுக்​கான ஓய்​வூ​தி​யத் தொகையை தற்​போதைய நில​வரத்​துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்​டும். ஓய்வு பெற்​றவர்​களுக்​கான மருத்​து​வக் காப்​பீட்டு பிரீமி​யம் தொகையை வங்​கி​களே முழு​மை​யாக ஏற்க வேண்​டும். பணிக்​கொடை உச்ச வரம்பை உயர்த்த வேண்​டும்.

இக்​கோரிக்​கை​களை வலி​யுறுத்​தி, நாடு தழு​விய அளவில் வங்கி ஊழியர்​கள் 11-ம் தேதி (இன்​று) வேலைநிறுத்​தத்​தில் ஈடு​படு​கின்​ற​னர். அகில இந்​திய வங்கி ஊழியர்​கள் சங்​கம் உட்பட 7 சங்​கங்​கள் பங்​கேற்​கின்​றன. தமி​ழ​கத்​தில் 60 ஆயிரம் பேர் உட்பட நாடு முழு​வதும் 8 லட்​சம் ஊழியர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்​கின்​ற​னர். இவ்​வாறு அவர் கூறினர்.

நாளை (12-ம் தேதி) சனி, 13-ம் தேதி ஞாயிறு, 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகிய 3 நாட்​களும் அரசு விடு​முறை என்​ப​தால் வங்​கி​கள் செயல்​ப​டாது. இதனால், வங்கி சேவை தொடர்ந்து 4 நாட்​கள் முடங்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version