Home விளையாட்டு செய்திகள் 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றி வங்கதேச அணி...

2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றி வங்கதேச அணி சாதனை

0

பாகிஸ்​தானுக்கு எதி​ரான 2-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் 78 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வங்கதேச அணி வெற்றி பெற்​றுள்​ளது. மேலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்​கில் முழு​மை​யாக கைப்​பற்றி சாதனை படைத்​துள்​ளது வங்​கதேச அணி. பாகிஸ்​தான் அணி, வங்​கதேசத்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது.

முதல் டெஸ்​டில் வங்​கதேசம் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது. இந்​நிலை​யில் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 16-ம் தேதி சில்​ஹெட் மைதானத்​தில் தொடங்​கியது. வங்​கதேசம் தனது முதல் இன்​னிங்​ஸில் 278 ரன்​களும், பாகிஸ்​தான் 232 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழந்​தன. இதையடுத்து முதல் இன்​னிங்​ஸில் 56 ரன்​கள் முன்​னிலை​யைப் பெற்ற வங்​கதேசம் 2-வது இன்​னிங்​ஸில் 390 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அந்த அணி​யின் முஷ்பிகுர் ரஹிம் 137, லிட்​டன் தாஸ் 69, மஹ்​முதுல் ஹசன் ஜாய் 52 ரன்​கள் குவித்​தனர்.

இதையடுத்து 437 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் பாகிஸ்​தான் அணி 2-வது இன்​னிங்​ஸைத் தொடங்​கியது. 4-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் பாகிஸ்​தான் அணி 7 விக்​கெட் இழப்​புக்கு 316 ரன்​கள் எடுத்​திருந்​தது. கேப்​டன் ஷான் மசூத் 71, பாபர் அசம் 47, சல்​மான் ஆகா 71 ரன்​கள் எடுத்து அவுட்​டா​யினர். இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற கடைசி நாள் ஆட்​டத்தை முகமது ரிஸ்​வான் 75 ரன்​களு​ட​னும், சஜித் கான் 8 ரன்​களு​ட​னும் தொடங்​கினர். ஆனால் முகமது ரிஸ்​வான் 94, சஜித் கான் 28 ரன்​களில் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்​தான் 2-வது இன்​னிங்ஸ் 97.2 ஓவர்​களில் 358 ரன்​களில் முடிவுக்கு வந்​தது. இதையடுத்து 78 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வங்​கதேசம் வெற்றி பெற்​றது. மேலும் தொடரை​யும் 2-0 என்ற கணக்​கில் முழு​மை​யாகக் கைப்​பற்றி வங்​கதேச அணி சாதனை படைத்​தது. ஆட்​ட​நாயக​னாக லிட்​டன் தாஸும், தொடர்​நாயக​னாக முஷ்பிகுர் ரஹி​மும் தேர்வு செய்​யப்​பட்​டார். கடந்த 2024-ம் ஆண்​டில் பாகிஸ்​தான் சென்ற வங்​கதேச அணி அங்கு 2-0 என்ற கணக்​கில் டெஸ்ட் தொடரைக் கைப்​பற்றி சாதனை படைத்​தது. தற்​போது 2-வது முறை​யாக 2-0 என்ற கணக்​கில் தாய்​நாட்​டில் பாகிஸ்​தானுக்கு எதி​ராக தொடரைக் கைப்​பற்றி வரலாற்​றுச்​ சாதனையை வங்​கதேசம்​ படைத்​துள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version