வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பால் ஸ்டிர்லிங் 60, கேட் கார்மைக்கேல் 59, கர்திஷ் கேம்பர் 44, லார்கன் டக்கர் 41, ஜோர்டான் நெய்ல் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
பார்ரி மெக்கார்த்தி 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 3, ஹசன் முராத் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.














