பளுகல் அருகே மேல்பாலை பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (36) கூலி தொழிலாளி. புதிதாக வீடு கட்ட பழைய வீட்டை இடித்து அதில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், இரும்பு பைப்புகள், ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் போன்றவற்றை அருகில் அடுக்கி வைத்திருந்தார். நேற்று (8-ம் தேதி) அதே பகுதியைச் சேர்ந்த அனீத் குமார், இடைக்கோடு விராலி விளையைச் சேர்ந்த ஸ்டெல்லஸ் (49) ஆகியோர் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ரதீஷ் பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.














