உதய்பூரில் பாலேஸ்வரி மாதாவுக்கு ரூ.51 லட்சத்தில் அலங்காரம்

0
20

ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூரிலுள்ள பாலேஸ்​வரி மாதா தேவி சிலைக்கு பக்​தர்​கள் ரூ.51 லட்​சம் மதிப்​புள்ள கரன்சி நோட்​டு​களால் அலங்​காரம் செய்​து உள்​ளனர். புவானா பகு​தி​யில் பிரசித்தி பெற்ற பாலேஸ்​வரி மாதா கோயில் அமைந்​துள்​ளது. இந்த கோயி​லில் தற்​போது நவராத்​திரி திரு​விழா நடை​பெற்று வரு​கிறது.

இதையொட்டி பாலேஸ்​வரி மாதாவுக்கு ரூ.51,51,551 மதிப்​புடைய கரன்சி நோட்​டு​களால் நேற்று முன்​தினம் பக்​தர்​களால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்​டு​களால் இந்த அலங்​காரம் நடை​பெற்​ற​தாக கோயிலை நிர்​வகிக்​கும் பாலேஸ்​வர் யுவ மண்​டல் கமிட்டி தெரி​வித்​துள்​ளது.

இந்த அலங்​காரத்​துக்கு கடந்த 3 ஆண்​டு​களாக பக்​தர்​களிட​மிருந்து நன்​கொடையை கோயில் நிர்​வாகம் பெற்று வந்​தது. முதலாண்டில் அம்​மனுக்கு ரூ.11,11,111 மதிப்​புடைய நோட்​டு​களால் அலங்​கார​மும், 2-ம் ஆண்​டில் ரூ.21,21,121 மதிப்​புடைய நோட்டுகளால் அலங்​கார​மும், 3-ம், ஆண்​டில் ரூ.31,31,131 மதிப்​புடைய நோட்​டு​களால் அலங்​கார​மும் நடை​பெற்​றது. தற்​போது 4-ம் ஆண்​டாக ரூ.51,51,151 மதிப்​புடைய நோட்​டு​களால் அம்​மனுக்கு அலங்​காரம் நடை​பெற்​றுள்​ளது. இதுதொடர்​​பான வீடியோ சமூக வலை​தளங்​களில்​ வெளி​யாகி வைரலாகியுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here