பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2 – தாண்டவம்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
213

போயபதி சீனு – பாலகிருஷ்ணா இணையும் ‘அகண்டா 2 – தாண்டவம்’ படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

போயபதி சீனு இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த படம் ‘அகண்டா’. இதில் ப்ரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். 2021-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இந்தப் படம் வெளியானது.

2021-ம் ஆண்டு அதிக வசூல் செய்த தெலுங்குப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இதன் பின்னணி இசை, ஆக்‌ஷன் காட்சிகள் என வெகுவாக பேசப்பட்டன. ஓடிடியில் அமோக வரவேற்பினைப் பெற்றது.

இந்த மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால், போயபதி சீனு – பாலகிருஷ்ணா இருவருமே வெவ்வேறு படங்களில் பணிபுரிந்து வந்தார்கள். தற்போது இருவரும் இணையும் ‘அகண்டா 2 – தாண்டவம்’ படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இப்படத்தின் பூஜை இன்று (அக். 16) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரியவுள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்குமா அல்லது புதிய கதையா என்பதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here