Home சினிமா செய்திகள் மீண்டும் இணைகிறது பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி கூட்டணி!

மீண்டும் இணைகிறது பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி கூட்டணி!

0

பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. பாண்டிராஜ் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்து யாருடைய படத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்துவிட்டார் விஜய் சேதுபதி.

அட்லீ தயாரிக்கவுள்ள இப்படத்தினை பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார். இதற்கான முன்தயாரிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டார்கள். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பினை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தினை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

‘நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களில் பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 3-வதாக மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர். இக்கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி உடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version