‘பேபி ஜான்’, ‘தெறி’-யின் அப்பட்டமான ரீமேக் இல்லை: சொல்கிறார் வருண் தவண் 

0
163

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ஹிட்டான படம், ‘தெறி’. இதில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வருண் தவண், கீர்த்தி சுரேஷ், வாமிகா, சான்யா மல்ஹோத்ரா என பலர் நடித்துள்ளனர். ஜீவா நடித்த ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இயக்கியுள்ள இந்தப் படம் டிச.25-ல் வெளியாகிறது.

இதன் புரமோஷனில் கலந்துகொண்ட வருண் தவண், “இது தெறி படத்தின் அப்பட்டமான ரீமேக் இல்லை” என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “தெறி கதையின் சாராம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்திக்கு ஏற்றபடி மாற்றியிருக்கிறோம். ‘தெறி’ படத்தை அப்படியே ரீமேக் செய்திருப்பார்கள் என நினைத்துவந்தால் ஏமாற்றமே மிஞ்சும். ‘தெறி’யை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. நிஜசம்பவங்களின் அடிப்படையில் சில காட்சிகளை இதில் சேர்த்திருக்கிறோம். குழந்தை வளர்ப்பு, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை இந்தப் படம் பேசியிருக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here