நீர்மின் நிலையத்தை பாதுகாத்த வீரர்களுக்கு விருது

0
40

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது.

இதையடுத்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஜீலம் நதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள உரி நீர் மின் நிலையத்தை குறிவைத்தும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர்.

இதனால் அந்த அணை தப்பித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 19 சிஐஎஸ்எப் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, டெல்லியில் உள்ள சிஐஎஸ்எப் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here