கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஆட்டோ ஓட்டுநர் டென்னிஸ் ஏசுவடியான், தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது, மேலராமன்புதூரைச் சேர்ந்த சோபிகுமார் என்பவர் வழிமறித்து, முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த டென்னிஸ் ஏசுவடியான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் சோபிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














