ஆஸ்திரேலியாவுக்கு கடும் பின்னடைவு: ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகம்

0
25

பென் ஸ்டோக்ஸ் தலை​மையி​லான இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து பாரம்​பரிய​மான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்​பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்​தில் தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் இந்த போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் பாட் கம்​மின்ஸ் விளை​யாடு​வது சந்​தேகம் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. முதுகு வலி காயத்​தில் இருந்து அவர், இன்​னும் முழு​மை​யாக குணமடை​யாததே இதற்கு காரணம். சிட்னி மார்​னிங் ஹெரால்டு பத்​திரிகை தகவலின்​படி பாட் கம்​மின்​ஸுக்கு கடந்த வாரம் ஸ்கேன் பரிசோதனை செய்​யப்​பட்​டுள்​ளது.

இதில் முதுகு பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் குணமடை​யாதது தெரிய​வந்​துள்​ளது. இதனால் அவர், உடனடி​யாக பந்து வீசுவதற்​கான வாய்ப்பு இல்லை என கூறப்​படு​கிறது. முதல் போட்​டி​யில் மட்​டும் இல்லை ஆஷஸ் தொடர் முழு​வதுமே கம்​மின்ஸ் விளை​யாடு​வது சந்​தேகம் என்றே கிரிக்​கெட் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. எனினும் ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் இதுதொடர்​பாக எந்​த​வித அறி​விப்​பை​யும் வெளி​யிட​வில்​லை.

கடந்த சில தினங்​களுக்கு முன்​னர் இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி மற்​றும் டி 20 தொடரில் கலந்து கொள்​ளும் ஆஸ்​திரேலிய அணி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதில் பாட் கம்​மின்ஸ் இடம் பெற​வில்​லை. ஆஷஸ் தொடரில் இருந்து பாட் கம்​மின்ஸ் வில​கி​னால் சீனியர் பேட்​ஸ்​மே​னான ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்​தக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த ஜனவரி மாதம் இலங்கை டெஸ்ட் தொடரில் பாட் கம்​மின்ஸ் விளை​யா​டாத போது ஸ்மித் கேப்​ட​னாக செயல்​பட்​டிருந்​தார். ஸ்மித் 40 டெஸ்ட் போட்​டிகளுக்கு கேப்​ட​னாக இருந்​துள்​ளார். அவரது தலை​மை​யின் கீழ் ஆஸ்​திரேலிய அணி 23 வெற்​றி, 10 தோல்​வி, 7 டிராவை பதிவு செய்​துள்​ளது.

பாட் கம்​மின்​ஸுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் அணி​யில் சேர்க்​கப்​படக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மிட்​செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்​வுட் ஆகியோ​ருக்கு உறு​துணை​யாக ஸ்காட் போலண்ட் செயல்​படக்​கூடும். இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக 5 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி உள்ள ஸ்காட் போலண்ட் 20 விக்​கெட்​களை கைப்​பற்​றி​யுள்​ளார். மெல்​பர்​னில் கடந்த 2021-ம் ஆண்டு இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் ஸ்காட் போலண்ட் 7 ரன்​களை விட்​டுக்​கொடுத்​து 6 விக்​கெட்​களை வீழ்த்​தி அசத்​தி​யிருந்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here