பதிலடி கொடுத்தது ஆஸி: தென் ஆப்பிரிக்காவை 138 ரன்களுக்கு சுருட்டியது – கம்மின்ஸ் அசத்தல் @ WTC  Final

0
159

ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணியை 138 ரன்​களுக்கு ஆட்​ட​மிழக்​கச் செய்து பதிலடி கொடுத்​தது ஆஸ்​திரேலிய அணி. அந்த அணி​யின் கேப்​டன் பாட் கம்​மின்ஸ் அபார​மாக செயல்​பட்டு 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

லண்​டன் லார்ட்ஸ் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி முதல் இன்​னிங்​ஸில் 56.4 ஓவர்​களில் 212 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பியூ வெப்​ஸ்​டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்​கள் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி சார்​பில் காகிசோ ரபாடா 5, மார்கோ யான்​சன் 3 விக்​கெட்​கள் வீழ்த்​தினர்.

இதையடுத்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இதையடுத்து பேட்​டிங்கை தொடங்​கிய தென் ஆப்​பிரிக்க அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 22 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 43 ரன்​கள் எடுத்​தது. கேப்​டன் தெம்பா பவு​மா, டேவிட் பெடிங்​ஹாம் 8 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல்
இருந்​தனர்.

முன்​ன​தாக எய்​டன் மார்க்​ரம் 0, ரியான் ரிக்​கெல்​டன் 16 ரன்​களில் மிட்​செல் ஸ்டார்க் பந்​தில் ஆட்​ட​மிழந்​தனர். வியான் முல்​டர் 6 ரன்​களில் பாட் கம்​மின்ஸ் பந்​தி​லும், டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 2 ரன்​களில் ஜோஷ் ஹேசில்​வுட் பந்​தி​லும் போல்​டா​னார்​கள். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தென் ஆப்​பிரிக்க அணி தொடர்ந்து விளை​யாடியது.

நிதான​மாக விளை​யாடி வந்த தெம்பா பவுமா 84 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 36 ரன்​கள் எடுத்த நிலை​யில் பாட் கம்​மின்ஸ் பந்தை கவர் டிரைவ் செய்த போது மார்​னஷ் லபுஷேனின் அற்​புத​மான கேட்ச் காரண​மாக ஆட்​ட​மிழந்​தார். 5-வது விக்​கெட்​டுக்கு தெம்பா பவு​மா, பெடிங்​ஹாம் ஜோடி 64 ரன்​கள் சேர்த்​தது. இதன் பின்​னர் தென் ஆப்​பிரிக்க அணி ஆட்​டம் கண்​டது.

விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான கைல் வெர்​ரெய்ன் 39 பந்​துகளில் 13 ரன்​கள் எடுத்த நிலை​யில் பாட் கம்​மின்ஸ் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய மார்கோ யான்​சன் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் பாட் கம்​மின்ஸ் வீசிய பந்​தில் அவரிடமே பிடி​கொடுத்து நடையை கட்​டி​னார்.

பாட் கம்​மின்ஸ் ஒரே ஓவரில் கைப்​பற்றி இந்த 2 விக்​கெட்​களும் தென் ஆப்​பிரிக்க அணி​யின் அழுத்​தத்தை அதி​கரித்​தது. நிதான​மாக பேட் செய்து வந்த டேவிட் பெடிங்​ஹாம் 111 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​கள் எடுத்த நிலை​யில் பாட் கம்​மின்ஸ் பந்​தில் விக்​கெட் கீப்​பர் அலெக்ஸ் கேரி​யிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார்.

இதன் பின்​னர் களமிறங்​கிய கேசவ் மகாராஜ் 7 ரன்​கள் எடுத்த நிலை​யில் டிரா​விஸ் ஹெட், அலெக்ஸ் கேரி கூட்​ட​ணி​யால் ரன் அவுட் ஆனார். கடைசி வீர​ராக காகிசோ ரபாடா ஒரு ரன்​னில் பாட் கம்​மின்ஸ் பந்​தில் நடையை கட்ட தென் ஆப்​பிரிக்க அணி 57.1 ஓவர்​களில் 138 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 18.1 ஓவர்களை வீசி, 28 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் 2, ஜோஷ் ஹேசில்வுட் ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி விரைவாக விக்கெட்களை இழந்தது.

உஸ்மான் கவாஜா 6, கேமரூன் கிரீன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தனர். மார்னஷ் லபுஷேன் 22 ரன்களில் மார்கோ யான்சன் பந்தில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் 13, பியூ வெப்ஸ்டர் 9, பாட் கம்மின்ஸ் 2 ரன்களில் லுங்கி நிகிடி பந்தில் நடையை கட்டினர். டிராவிஸ் ஹெட்டை 9 ரன்னில் போல்டார்க்கினார் வியான் முல்டர். 40 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. அலெக்ஸ் கேரி 50 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் வெளியேறினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா, லுங்கி நிகிடி தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர். யான்சன் மற்றும் வியான் முல்டர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸி. இந்த ஆட்டத்தின் முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் நாள் ஒன்றுக்கு 14 விக்கெட்டுகள் வீதம் வீழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here