‘ஆஷஸ் தொடரில் ஆஸி. ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது’ – இங்கிலாந்துக்கு ஸ்மித் வார்னிங்

0
137

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது என இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களுக்கு ஸ்டீவ் ஸ்மித் வார்னிங் கொடுத்துள்ளார்.

ஆண்டர்சன் சச்சின் டிராபி தொடரில் இங்கிலாந்து மைதானங்கள் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு ஏதுவாக தட்டையானதாக இருப்பது பேசு பொருளாகி உள்ளது. இந்த கருத்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் முன்வைத்துள்ளார்.

“ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும். சில காலமாக இங்கிலாந்தில் ரன் குவிப்புக்கு ஏதுவான தட்டையான ஆடுகளங்களில் அவர்கள் விளையாடி வருகின்றனர். ஆனால், ஆஸ்திரேலியாவில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்ப்பது கடினம். கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் அப்படித்தான் உள்ளது.

ஒலிம்பிக் தொடருக்கான அணியில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் அதிகம் விளையாடி வருகிறேன். நான் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததற்கும் இதுதான் காரணம்” என ஸ்மித் கூறியுள்ளார்.

தற்போது ‘தி ஹன்ட்ரட்’ தொடரில் விளையாடுவதற்காக அவர் இங்கிலாந்து வந்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here