ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்.
ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் ஏடிபி பைனல்ஸ் தொடரின் 55 வருட வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜன்னிக் சின்னர். 23 வயதான அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தொடர்ந்து அமெரிக்க ஓபனில் வாகை சூடிய ஜன்னிக் சின்னர் தற்போது ஆண்டின் இறுதியை ஏடிபி பைனல்ஸ் பட்டத்துடன் நிறைவு செய்துள்ளார்.
இந்த சீசனில் மட்டும் அவர், மொத்தம் 70 வெற்றிகளை குவித்துள்ளார். ஏடிபி பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர்.














