பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி முதல் நாளான இன்று நண்பர்கள் 12 மணிக்கு உச்ச பூஜை, மாலை 5மணிக்கு சுமங்கலி பூஜை, 6: 30 மணிக்கு சாய் ரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது.
விழாவில் இரண்டாம் நாளான நாளை காலை 7 மணிக்கு பஜனை, 10 மணிக்கு ராஜ மேளம், பகல் 11: 30 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு, தொடர்ந்து பொங்கலுக்கு தீர்த்தம் தளித்தல், 1 மணிக்கு தீபாராதனை போன்றவை நடக்கிறது.மூன்றாம் நாளான 25-ம் தேதி மாலை 5: 30 மணிக்கு திருவிளக்கு பூஜை, தொடர்ந்து தங்க ரதம் பவனி, தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமயகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.














