ஆல்ரவுண்டராக அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அசத்தல்: ஐக்கிய அரபு அமீரகத்தை வென்றது ஆப்கன்

0
22

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் உள்ள ஆப்கானிஸ்​தான் – ஐக்​கிய அரபு அமீரகம் அணி​கள் மோதின.

முதலில் பேட் செய்த ஐக்​கிய அரபு அமீரகம் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 160 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீரர்​களான ஆர்​யன்ஷ் சர்மா 0 ரன்​களில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் பந்தி​லும், கேப்​டன் முகமது வசீம் 10 ரன்​களில் முஜீப் உர் ரஹ்மான் பந்​தி​லும் நடையை கட்​டினர்.

3-வது விக்​கெட்​டுக்கு இணைந்த அலிஷான் ஷராஃபு, சோஹைப் கான் ஜோடி சீர​ராக ரன்​கள் சேர்த்​தது. 84 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை முஜீப் உர் ரஹ்​மான் பிரித்தார். அலிஷான் ஷராஃபு 31 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 40 ரன்​கள் எடுத்த நிலை​யில் முஜீப் உர் ரஹ்​மான் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அப்​போது ஐக்​கிய அரபு அமீரகம் 11.2 ஓவர்​களில் 97 ரன்​கள் எடுத்​திருந்​தது.

இதன் பின்​னர் அந்த அணி ஆட்​டம் கண்​டது. சையது ஹைதர் 13, ஹர்​ஷித் கவுசிக் 0 ரன்​களில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் பந்​தில் வெளி​யேறினர். முகமது அர்ஃ​பான் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் ரஷித் கான் பந்​தில் ‘ஹிட்விக்கெட்’ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

தனது 2-வது அரை சதத்தை கடந்த சோஹைப் கான் 48 பந்துகளில், 4 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​கள் எடுத்த நிலை​யில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் பந்​தில் வெளியேறி​னார். இதைத் தொடர்ந்து ஹைதர் அலி 13, ஜூனைத் சித்​திக் 3 ரன்​களில் ரன்​ அவுட் ஆனார்​கள். ஆப்கானிஸ்​தான் அணி தரப்​பில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 4 ஓவர்​களை வீசி 15 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்கெட்​களை வீழ்த்​தி​னார். முஜீப் உர் ரஹ்​மான் 2, ரஷித் கான் ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

161 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த செய்த ஆப்கானிஸ்தான் 19.2 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்புக்கு 162 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. இப்ராகிம்ஸத்​ரன் 41 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்டரிகளு​டன் 53 ரன்​களும், டார்​விஷ் ரசூலி 23 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 33 ரன்​களும், அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 21 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 40 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்றியில் முக்​கிய பங்கு வகித்​தனர்.

முன்​ன​தாக ரஹ்மனு​மல்லா குர்​பாஸ் 0, குல்​பா​தின் நயீப் 13, செதி​குல்லா அடல் 16 ரன்​களில் நடையை கட்​டினர். ஆட்ட நாயக​னாக அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் தேர்​வா​னார். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் நியூஸிலாந்​திட​மும், 2-வது ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்​கா​விட​மும் தோல்வி கண்டிருந்தது.

தற்​போதைய வெற்​றி​யின் மூலம் சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை நூலிழை​யில் தக்​க​வைத்​துக் கொண்​டுள்ள ஆப்​கானிஸ்​தான் அணி 2 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் 3-வது இடத்​தில் உள்​ளது. தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தான் அணி வரும் 19-ம் தேதி கனடாவுடன் மோதுகிறது.

ரஷித் கான் 700 விக்கெட்கள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று ஐக்​கிய அரபு அமீரக அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஆப்கானிஸ்​தான் அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்த ஆட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தான் அணி​யின் கேப்​ட​னான ரஷித் கான், ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார். ஆட்​டத்​தின் 16-வது ஓவரை ரஷித் கான் வீசிய போது அவரது பந்​தில் முகமது அர்ஃ​பான் ‘ஹிட்விக்​கெட்’ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

டி 20 கிரிக்​கெட் அரங்​கில் ரஷித் கான் கைப்​பற்​றிய 700-வது விக்​கெட்​டாக இது அமைந்​தது. இதன் மூலம் தொழில்​முறை கிரிக்​கெட், சர்​வ​தேச கிரிக்​கெட் என அனைத்து வித​மான டி 20 போட்​டிகளி​லும் 700 விக்​கெட்​களை வீழ்த்​திய முதல் வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்​தார். இந்த வகை​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​களின் டுவைன் பிராவோ (631) 2-வது இடத்​தி​லும், சுனில் நரைன் (613) 3-வது இடத்​தி​லும்​ உள்​ளனர்​.

சூப்​பர் 8-ல் தென் ஆப்​பிரிக்கா

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் நேற்று ‘டி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தான் அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ஐக்​கிய அரபு அமீரகத்தை தோற்கடித்​தது.

இந்த ஆட்​டத்​தின் முடிவு காரண​மாக இதே பிரி​வில் ஹாட்ரிக் வெற்​றிகளு​டன் 6 புள்​ளி​கள் பெற்று முதலிடத்தில் இருந்த தென் ஆப்​பிரிக்க அணி சூப்​பர் 8 சுற்றுக்கு முன்​னேறியது. அந்த அணி​யின் நிகர ரன்விகிதம்​ 1.477 ஆக இருக்​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here