ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் கோப்பைக்கான ரக்பி போட்டியின் அரை இறுதியில் விளையாட இந்திய ஆடவர் அணியினர் தகுதி பெற்றுள்ளனர்.
ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியினர் 14-10 என்ற கணக்கில் லெபனானையும், 2-வது ஆட்டத்தில் 26-5 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தியது.
நேற்று நடைபெற்ற கால் இறுதியில் இந்தியா 21-7 என்ற கணக்கில் ஈரான் நாட்டு அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.
இதையடுத்து அரை இறுதிச் சுற்றில் இந்திய அணி, சவுதி அரேபியா அணியைச் சந்திக்கவுள்ளது.














