ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்

0
11

 சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வரு​கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சுற்றில் சீன அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

தேசிய மகளிர் கால்பந்து: தமிழக அணி வெற்ற: 30-வது தேசிய மகளிர் கால்பந்துப் போட்டியில் தமிழக அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் கேரள அணியை வீழ்த்தியது. ராஜமாதா ஜீஜாபாய் கோப்பைக்கான இந்த கால்பந்துப் போட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள பன்னியன்கரா டிஎம்கே அரேனா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. தமிழக அணிக்காக பிரியதர்ஷினி, ஷரோன் ஆகியோர் தலா ஒரு கோலும், கேரள அணியின் ஆர்ய ஒரு கோலும் அடித்தனர்.

வனிந்து ஹசரங்காவுக்கு பாராட்டு: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வனிந்து ஹசரங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் சரித் அசலங்கா பாராட்டு தெரிவித்தார். ஆசியக் கோப்பை போட்டியில் நேற்று முன்தினம் அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது.

முதலில் விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி, 14.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றி குறித்து இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறும்போது, “வனிந்து ஹசரங்கா அருமையாக பந்துவீசினார். உண்மையாக அவர் ஒரு சூப்பர் ஸ்டார் பந்துவீச்சாளர். அவருக்கு எனது பாராட்டுகள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here