ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதியில் ஆயுஷ் ஷெட்டி – ஹெச்.எஸ்.பிரனாய், பி.வி.சிந்து வெளியேற்றம்

0
24

சீனா​வின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் உலகத்​தர​வரிசை​யில் 25-வது இடத்​தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 20-வது இடத்​தில் உள்ள சீன தைபே​வின் ஷி யு ஜென்​னுடன் மோதி​னார். இதில் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

கால் இறுதி சுற்​றில் போட்​டித் தரவரிசை​யில் 3-வது இடத்தில் உள்ள இந்​தோ​னேஷி​யா​வின் ஜோனாதன் கிறிஸ்டி​யுடன் மோதுகிறார் ஆயுஷ் ஷெட்​டி. அதேவேளையில் மற்​றொரு இந்​திய வீர​ரான ஹெச்.எஸ்.பிர​னாய் 12-21, 19-21 என்ற செட் கணக்​கில் சீனாவன் வெங் ஹாங் யங்​கிடம் தோல்வி அடைந்​தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் ஒலிம்​பிக்​கில் இரு​முறை பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்து 18-21, 8-21 என்ற நேர் செட் கணக்​கில் சீனா​வின் வாங் ஷியி-​யிடம் தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டம் 46 நிமிடங்​களில் முடிவடைந்​தது. மற்​றொரு இந்​திய வீராங்​க​னை​யான உன்னதி ஹூடா 17-21, 9-21 என்ற செட் கணக்​கில் ஜப்​பானின் டோமோகா மியாஸாகி​யிடம் தோல்வி அடைந்தார்.

கலப்பு இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 13-21, 14-21 என்ற செட் கணக்​கில் மலேசி​யா​வின்​ சென்​ டங்​ ஜி, தோஹ் இ வெய்​ ஜோடி​யிடம்​ வீழ்​ந்​தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here