ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்

0
188

தென் கொரி​யா​வின் குமி நகரில் ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆடவருக்​கான 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீப்​பிள்​சேஸில் இந்​தி​யா​வின் அவி​னாஷ் சேபிள் தங்​கப் பதக்​கம் வென்று சாதனை படைத்தார். அவர், பந்​தய தூரத்தை 8:20.92 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்​தார்.

ஜப்​பானின் யுடாரோ நினே (8:24.41) வெள்​ளிப் பதக்​க​மும், கத்​தா​ரின் ஜகாரியா எலாஹ்லாமி (8:27.12) வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றினர். ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப்​பில் 36 வருடங்​களுக்​குப் பிறகு ஸ்டீப்​பிள்​சேஸில் இந்​திய வீரர் தற்​போது​தான் தங்​கப் பதக்​கம் வென்​றுள்​ளார். கடைசி​யாக 1989-ம் ஆண்டு தினா ராம் தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தார். அதற்கு முன்​ன​தாக 1975-ம் ஆண்டு ஹர்​பெல் சிங் முதன்​முறை​யாக தங்​கம் கைப்​பற்​றி​யிருந்​தார்.

மகளிருக்​கான 4×400 மீட்​டர் தொடர் ஓட்​டத்​தில் ஜிஸ்னா மேத்​யூ, ரூபால் சவுத்​ரி, ரஜி​தா, சுபா வெங்​கடேசன் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி பந்தய தூரத்தை 3:34.18 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றது. வியட்​நாம் (3:34.77) வெள்​ளிப் பதக்​க​மும், இலங்கை (3:36.67) வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றின.

ஆடவருக்​கான 4×400 மீட்​டர் தொடர் ஓட்​டத்​தில் ஜெய் குமார், தர்​மவீர் சௌத்​ரி, மனு தெக்​கி​னாலில் சாஜி, விஷால் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி பந்தய தூரத்தை 3:03.67 விநாடிகளில் எட்டி 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றது. கத்​தார் (3:03.52) தங்​கப் பதக்​க​மும், சீனா (3:03.73) வெண்​கலப் பதக்​க​மும் பெற்​றன.

மகளிருக்​கான 100 மீட்​டர் தடை தாண்​டும் ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் ஜோதி யார்​ராஜி பந்தய தூரத்தை 12.96 விநாடிகளில் கடந்து புதிய சாதனை​யுடன் முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்றார். இதற்கு முன்​னர் 1998-ம் ஆண்டு கஜகஸ்​தானின் ஓல்கா ஷிஷிகி​னா, 2011-ம் ஆண்டு சீனா​வின் சன் யாவெய் ஆகியோர் 13.04 விநாடிகளில் இலக்கை எட்​டியதே சாதனை​யாக இருந்​தது. இதை முறியடித்து புதிய சாதனையை படைத்​துள்​ளார் ஜோதி யார்​ராஜி.

2023-ம் ஆண்டு நடை​பெற்ற ஆசிய தடகள சாம்​பியன்​ஷிப்​பிலும் ஜோதி யார்​ராஜி தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தார். இதன் மூலம் 100 மீட்​டர் தடை​தாண்​டும் ஓட்​டத்​தில் தங்​கப் பதக்​கத்தை தக்​க​வைத்​துக் கொண்ட 5-வது வீராங்​கனை என்ற பெரு​மையை அவர், பெற்​றுள்​ளார். இதற்கு முன்​னர் ஜப்​பானின் எமி அகிமோட்டோ (1979, 1981, 1983), சீனா​வின் ஜாங் யூ (1991, 1993), சீனா​வின் சு யின்​பிங் (2003, 2005), சீனா​வின் சன் யாவே (2009, 2011) ஆகியோர் தங்​கப் பதக்​கத்தை தக்​க​வைத்​திருந்​தனர்.

மகளிருக்​கான நீளம் தாண்​டு​தலில் இந்​தி​யா​வின் அன்சி சோஜன் (6.33மீட்​டர்) வெள்​ளிப் பதக்​க​மும், ஷைலி சிங் (6.30 மீட்​டர்) வெண்​கலப் பதக்கமும் வென்​றனர். ஈரானின் ரெய்​ஹானே மொபினி (6.40 மீட்​டர்) தங்​கப் பதக்​கம் வென்​றார். நேற்று ஒரே​நாளில் மட்​டும்​ இந்​தி​யா 3 தங்​கம்​, 2 வெள்ளி, ஒரு வெண்​கலப்​ பதக்​கம்​ வென்​றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here