ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா இன்று மோதல்

0
46

 ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா – ஐக்​கிய அரபு அமீரக அணி​கள் மோதுகின்​றன.

8 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடர் துபாய் மற்​றும் அபு​தா​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் இன்று இரவு ஐக்​கிய அரபு அமீரகத்​துடன் மோதுகிறது.

இந்த ஆட்​டம் வரும் 14-ம் தேதி பாகிஸ்​தான் அணிக்கு எதி​ராக மோது​வதற்​கான சிறந்த பயிற்சி ஆட்​ட​மாக இந்​திய அணிக்கு அமையக்​கூடும். பேட்​டிங் வரிசை​யில் ஷுப்​மன் கில் மீண்​டும் திரும்பி உள்​ள​தால் சஞ்சு சாம்​சனின் இடம் கேள்விக்​குறி​யாகக்​கூடும். ஏனெனில் சாம்​சன் முதல் 3 இடங்​களுக்​குள் விளை​யாடக்​கூடிய​வர். தொடக்க வீரர்​களாக அபிஷேக் சர்​மா, ஷுப்​மன் கில் களமிறங்​கும் பட்​சத்​தில் 3-வது வீர​ராக திலக் வர்மா விளை​யாடக்​கூடும்.

ஏனெனில் இந்த இடத்​தில் அவர், கடைசி​யாக விளை​யாடிய சில ஆட்​டங்​களில் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தி​யுள்​ளார். இதனால் சஞ்சு சாம்​சனுக்கு விளை​யாடும் லெவனில் வாய்ப்பு வழங்​கப்​படு​வது சந்​தேகம் என்றே கூறப்​படு​கிறது. 4-வது இடத்​தில் சூர்​யகு​மார் யாத​வும், அவரை தொடர்ந்து ஹர்​திக் பாண்​டி​யா​வும் களமிறங்​கக்​கூடும். 6-வது இடத்​தில் ஷிவம் துபே இடம் பெற வாய்ப்பு உள்​ளது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ஜிதேஷ் சர்மா 7-வது இடத்​தில் விளை​யாடக்​கூடும். விதர்​பாவை சேர்ந்த ஜிதேஷ் சர்மா ஆட்​டத்​தின் இறு​திப் பகு​தி​யில் அதிரடி​யாக விளை​யாடும் திறன் கொண்​ட​வர். ஐபிஎல் தொடரில் அவர், ஆர்​சிபி அணிக்​காக இம்​முறை சிறப்​பாக விளை​யாடி இருந்​தார்.

8-வது இடத்தில் அக்​சர் படேல் இடம் பெறக்​கூடும். பிர​தான வேகப்​பந்து வீச்​சாளர்​காக ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங் களமிறங்​கு​வார்​கள். அதேவேளை​யில் பிர​தான சுழற்​பந்து வீச்​சாள​ராக வருண் சக்​ர​வர்த்தி அல்​லது குல்​தீப் யாதவ் இடம் பெறக்​கூடும். ஐக்​கிய அரபு அமீரக அணியை பொறுத்​தவரை, இந்த ஆட்​டம் மிகப்​பெரிய போட்​டி​யாக இருக்​கும். ஏனெனில் ஜஸ்​பிரீத் பும்​ராவை எதிர்​கொள்​வது அல்​லது ஷுப்​மன் கில்​லுக்கு பந்​து​வீசுவது என்​பது ஐசிசி உறுப்பு நாட்​டின் கிரிக்​கெட் வீரரின் வாழ்க்​கை​யில் அரி​தான நிகழ்​வாகவே பார்க்​கப்​படு​கிறது. ஒட்​டுமொத்​த​மாக ஆசிய கோப்பை தொடர் அந்த அணிக்கு உயர்​மட்ட அளவி​லான போட்​டிகளை விளை​யாடு​வதற்​கான களத்தை அமைத்​துக் கொடுப்​ப​தாக அமையக்​கூடும்.

‘எப்போதும் ஆக்ரோஷமே’ – இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “களத்தில் ஆக்ரோஷம் என்பது எப்போதும் இருக்கும். ஆக்ரோஷம் இல்லாமல் இந்த விளையாட்டை விளையாட முடியாது. எங்களுக்கு சில பயிற்சி அமர்வுகள் மட்டுமே உள்ளன. எனினும் நன்றாகவே உணர்கிறோம். ஆசிய கோப்பையில் சிறந்த அணிகளுடன் விளையாடுவது நல்ல சவாலாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரக அணி அற்புதமான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் சில ஆட்டங்களில் நெருங்கி வந்தனர். ஆசிய கோப்பையில் அவர்கள் எல்லையைக் கடப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

‘எளி​தாக விட​மாட்​டோம்’ – ஐக்​கிய அரபு அமீகரத்​தின் பயிற்​சி​யாள​ராக உள்ள லால்​சந்த் ராஜ்புத் கூறும்​போது, “ஷார்​ஜா​வில் சமீபத்​தில் முடிவடைந்த முத்​தரப்பு டி 20 தொடரில் விளை​யாடியதன் மூலம் ஆசிய கோப்​பைக்கு சிறந்த முறை​யில் தயா​ராகி உள்​ளோம். முத்​தரப்பு தொடரின் ஒரு ஆட்​டத்​தில் பாகிஸ்​தான் அணி​யின் 5 விக்​கெட்​களை 100 ரன்​களுக்​குள் கைப்​பற்​றினோம். அந்த ஆட்​டம் நெருக்​க​மாக அமைந்​திருந்​தது. இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஆட்​டம் கடின​மானது என்​பது எங்​களுக்​குத் தெரி​யும், ஆனால் உலக கிரிக்​கெட்​டில் சிறந்த அணிக்கு எதி​ராக எங்​களை சோதித்​துப் பார்க்க வாய்ப்பு கிடைத்​துள்​ளது. இது கடின​மான போட்​டி​தான்​, ஆனால்​ எங்​கள்​ வீரர்​கள்​ எளி​தாக விட்​டுக்​கொடுக்​க மாட்​டார்​கள்​” என்றார்.

அணி​கள் விவரம்

இந்​தி​யா: சூர்​யகு​மார் யாதவ் (கேப்​டன்), ஷுப்​மன் கில், அபிஷேக் சர்​மா, திலக் வர்​மா, சஞ்சு சாம்​சன், ரிங்கு சிங், ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே, அக்​சர் படேல், ஜிதேஷ் சர்​மா, வருண் சக்​ர​வர்த்​தி, குல்​தீப் யாதவ், ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங், ஹர்​ஷித் ராணா.

ஐக்​கிய அரபு அமீரகம்: முஹம்​மது வசீம் (கேப்​டன்), அலிஷன் ஷரபு, ஆர்​யன்ஷ் ஷர்​மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோ​சா, ஹைதர் அலி, ஹர்​ஷித் கவுஷிக், ஜுனைத் சித்​திக், மதி​யுல்லா கான், முஹம்​மது ஃபரூக், முஹம்​மது ஜவதுல்​லா, முஹம்​மது ஜோஹைப், ராகுல் சோப்​ரா, ரோஹித் கான், சிம்​ரன்​ஜீத் சிங், சாகிர் கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here