ஆசிய கோப்பை: இந்திய மகளிர் அணி சாம்பியன்

0
233

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இந்திய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மலேசியாவின் கோலாலம்பூரில் இந்த இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது. இந்திய வீராங்கனை ஜி. திரிஷா 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய வங்கதேச அணி 18.2 ஓவர்களில் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் ஆயுஷி சுக்லா 3, சோனம் யாதவ், பருணிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here