ஆஷஸ் தொடர்: ஜோஷ் ஹேசில்வுட் விலகல்; பாட் கம்மின்ஸ் ரிட்டர்ன்!

0
15

ஆஸ்​திரேலியா – இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

5 போட்​டிகள் கொண்ட இந்​தத் தொடரில் முதல் 2 ஆட்​டங்​களி​லும் ஆஸ்​திரேலிய அணி அபார வெற்றி பெற்​றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 2-0 என முன்​னிலை வகிக்​கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக அவதிப்​பட்டு வந்த ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜோஷ் ஹேசில்​வுட் ஆஷஸ் தொடரில் இருந்து முழு​மை​யாக விலகி உள்​ளார். முதல் 2 போட்​டிகளி​லும் விளையாடாத அவர், 3-வது டெஸ்​டில் களமிறங்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யாத​தால் தொடரில் இருந்து விலகி உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதேவேளை​யில் கேப்​ட​னும், முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரு​மான பாட் கம்​மின்ஸ் முதுகு பகு​தி​யில் ஏற்​பட்ட காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடைந்​துள்​ள​தால் 3-வது டெஸ்ட் போட்டி​யில் களமிறங்க ஆயத்​த​மாகி வரு​கிறார்.

இதுதொடர்​பாக ஆஸ்​திரேலிய அணி​யின் பயிற்​சி​யாள​ரான ஆண்ட்ரூ மெக்​டொ​னால்டு கூறும்​போது,”ஜோஷ் ஹேசில்​வுட் காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யாத​தால் தொடரிலிருந்து விலகி உள்​ளார்.

அவரது கவனம் அடுத்த ஆண்டு நடை​பெற டி 20 உலகக் கோப்பை தொட​ராக இருக்​கும். பாட் கம்​மின்ஸ் சிறந்த முறை​யில் தயா​ராகி உள்​ளார். அவர், போட்​டி​யில் விளை​யாடு​வதற்​கான முழு உடற்​தகு​தி​யுடன் உள்​ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்​டி​யில் அவர், டாஸில் பங்​கேற்​பார் என நான்​ எதிர்​பார்க்​கிறேன்​” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here