அருமனை அடுத்த இடைக்கோடு பஞ்சாயத்து 17 வது வார்டுக்கு உட்பட்ட உத்தரங்கோடு பகுதி உள்ளது. இந்த சாலை மார்த்தாண்டத்தில் இருந்து மலையோர பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த பகுதியில் மழை நீர் வடிகால் ஓடை செய்யும் பணி நடைபெற உள்ளது.
இதற்க்காக இன்று (அக்.,12) சாலையில் நடுவே ஜல்லி குவியை கொட்டியுள்ளனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர். எனவே சம்மந்தபட்ட பகுதியில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.