அருமனை: இறைச்சிக்கழிவுடன் வந்த வாகனம் பறிமுதல்

0
254

அருமனை அருகே ஆறுகாணி பகுதியில் பன்றி பண்ணை அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையை சம்பந்தப்பட்ட பன்றி பண்ணைக்கு இன்று 6-ம் தேதி காலை சரக்கு வாகனத்தில் கேரள மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வரப்பட்டதாக ஆறுகாணி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை பேணு என்ற பகுதியில் தடுத்து நிறுத்தி பின் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

 வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை கைது செய்தனர். பிறகு சரக்கு வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இறைச்சிகளை ஏற்றி வந்து பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் எல்லை பகுதி சோதனை சாவடிகளை கடந்து வந்ததா? அல்லது வேறு வழியாக வந்ததா? என விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here