அருமனை அருகே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65) கேரளாவில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் (நவ.,16) இரவு ராஜேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவி சியாமளா மகள் உள்ளிட்டோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பின்புறஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ. 9 ஆயிரம் திருடிச் சென்றனர். அதே நாள் பகலில் மார்த்தாண்டத்தில் நகை அடமானம் வைத்து சுமார் 3 லட்சம் ரூபாய் பெற்றனர். நகை அடமானம் வைத்ததை அறிந்த மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு நபர்களா? என பல்வேறு கோணங்களில் அருமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.