Home கன்னியாகுமரி செய்திகள் அருமனை: ஆசிட் குடித்து பலியான வாலிபர்

அருமனை: ஆசிட் குடித்து பலியான வாலிபர்

0

அருமனை அருகே தோட்டப் பாறவிளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் அஜித் (30). தொழிலாளி. இவருக்குத் திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மனைவி தனது குழந்தையுடன் அஜித்தைப் பிரிந்து சென்று விட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அஜித் சம்பவ தினம் திடீரென தனது வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்துக் குடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version