ஆறுகாணி: பொதுமக்கள் போராட்டம்; பன்றி பண்ணை அகற்றம்

0
247

அருமனை அருகே ஆறுகாணி  பகுதியில் வினு என்பவருக்கு சொந்தமான பன்றி  பண்ணை உள்ளது. இந்த பன்றி பண்ணையில் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், பொது மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் புகார் உள்ளது. கடந்த சில நாட்களும் முன்பு பன்றி  பண்ணைக்கு கழிவுகள்  ஏற்றி வந்த டெம்போ சிறை பிடிக்கப்பட்டு 15 ஆயிரம் ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

      இதற்கிடையே இந்த பன்றிப் பண்ணையை அகற்ற  கேட்டு நேற்று முன்தினம் மாலை அந்தப் பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று (25-ம் தேதி) பன்றி பண்ணையில் உள்ள சுமார் 50 பன்றிகளை கடையாலுமூடு பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் ஊழியர்கள் அகற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here