செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

0
19

செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்தி உள்​ளார். டெல்லி பாரத் மண்​டபத்​தில் செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு நேற்று முன்​தினம் தொடங்​கியது.

இந்த மாநாட்​டின் 2-வது நாளான நேற்று பல்​வேறு கருத்​தரங்​கு​கள் நடை​பெற்​றன. மாநாடு தொடர்​பாக பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பங்​களை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த வேண்​டும்.

குறிப்​பாக செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்தை மக்​களின் நலனுக்​காக ஆக்​கப்​பூர்​வ​மாக பயன்​படுத்த வேண்​டும். டெல்லி மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக பாரத் மண்​டபத்​தில் சிறப்பு கண்​காட்சி நடை​பெறுகிறது. இதில் புதிய சிந்​தனை​கள், புது​மை​யான கண்​டு​பிடிப்​பு​கள் இடம் பெற்​றுள்​ளன.

உலகின் நன்​மைக்​காக செயற்கை நுண்​ணறிவை வடிவ​மைப்​ப​தில் இந்​திய நிபுணர்​கள் மிகச் சிறப்​பாக பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​களின் திறமை, புதுமை கண்​டு​பிடிப்​பு​கள் டெல்லி கண்​காட்​சி​யில் காட்​சிப்​படுத்​தப்​பட்டு உள்​ளன. செயற்கை நுண்​ணறிவை மிகுந்த பொறுப்​புடன் பயன்​படுத்த வேண்​டும்.

இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். மகா​பாரதத்​தில் அறி​வு, ஞானம் தொடர்​பாக கூறப்​பட்​டிருக்​கும் வாசகங்​களின் ஆடியோவை​யும் பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்டு உள்​ளார்.

“பு​தி​ய​வை​களை அறிந்து கொள்ள ஆர்​வம் காட்ட வேண்​டும். அவற்றை உன்​னிப்​பாக கேட்​டறிய வேண்​டும். ஆழமாக மனதில் பதிய வைக்க வேண்​டும். அவற்றை மீண்​டும் நினை​வு​கூர வேண்​டும். தீவிர​மாக ஆய்வு செய்ய வேண்​டும். முழு​மை​யான அர்த்​தத்தை அறிந்து கொள்ள வேண்​டும். உண்​மையை புரிந்து கொள்ள வேண்​டும். இவை அனைத்​தும் ஒன்​றிணைந்​திருப்​பதே ஞானம்” என்று ஆடியோ​வில் கூறப்​பட்டு உள்​ளது.

டெல்லி ஏஐ உச்சி மாநாட்​டின் தொடக்க விழா​வில் பல்​வேறு செயற்கை நுண்​ணறிவு நிபுணர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி கலந்​துரை​யாடி​னார். பல்​வேறு முக்​கிய அரங்​கு​களை அவர் பார்​வை​யிட்​டார். இவை தொடர்​பான வீடியோவை​யும் பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில்​ வெளி​யிட்​டு உள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here