விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய  போலீஸ் அஞ்சுகிறதா? – திருமாவளவன் கேள்வி

0
19

விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் அஞ்சுகிறதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். முன்​னாள் முதல்​வர் காம​ராஜர் நினைவு தினத்​தையொட்​டி, திருச்சியில் நேற்று காம​ராஜர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய திரு​மாவளவன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

கரூர் விவ​காரத்​தில் அரசி​யல் ஆதா​யம் தேடு​வதற்​காக, குற்ற உணர்வு இல்​லாமல், கொஞ்​சம் கூட கவலை இல்​லாமல், ஆட்சியாளர்கள் மீது பழி​போட முயற்​சிக்​கிறார் தவெக தலை​வர் விஜய். அவர் ஆபத்​தான அரசி​யலை கையில் எடுத்​திருக்​கிறார். அல்​லது ஆபத்​தானவர்​களிடம் சிக்கி இருக்​கிறார்.

கரூர் விவ​காரத்​தில் விஜய் மீது தமிழக காவல் துறை ஏன் இது​வரை வழக்கு பதிவு செய்​ய​வில்​லை? தமிழக அரசும், காவல் துறை​யும் அச்​சப்​படு​கிற​தா? தவெக விஜய்க்​கும், திமுக​வுக்​கும் ரகசி​யத் தொடர்பு உள்​ளதா என்ற சந்​தேகம் எழுகிறது.

தனது கொள்கை எதிரி பாஜக என்று விஜய் கூறி வந்த நிலை​யில், அவரைக் காப்​பாற்ற பாஜக ஓடோடி வரு​கிறது. திமுக அரசை​யும், கூட்​ட​ணிக் கட்​சிகளை​யும் பலவீனப்​படுத்த விஜய் களமிறக்​கப்​பட்​டுள்​ளார். அரசி​யல் ஆதா​யம் தேடு​வதும், தமிழக முதல்​வரை சீண்​டு​வதும்​தான் அவரது நோக்​க​மாக இருக்​கிறதே தவிர, கரூர் சம்​பவம் குறித்து அவருக்கு சிறிதும் கவலை இல்​லை.

ஆர்​எஸ்​எஸ் பின்​னணி​யில் இயங்​கக்​கூடிய விஜய்​யின் அரசி​யல் தமிழகத்​தில் எடு​ப​டாது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் விஜய் எப்​போதும் இணைய மாட்​டார். அவரது நோக்​கம் திமுக கூட்​ட​ணிக்கு கிடைக்​கும் வாக்​கு​களை​யும், சிறு​பான்​மை​யினர் வாக்​கு​களை​யும் பிரிக்க வேண்​டும் என்​பது​தான்.

பாஜக அனுப்​பியது​போல, காங்​கிரஸ் கட்​சி​யும் உண்மை அறி​யும் குழுவை அனுப்​பி​வைத்​து, கரூர் சம்​பவத்​தின் உண்மை நிலையை வெளி உலகுக்கு உணர்த்த வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here