ஃபோர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியலில் அபர்ணா பாலமுரளி

0
211

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்கு உட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை அபர்ணா பாலமுரளி இடம்பெற்றுள்ளார். இவருடன் இந்தி நடிகர் ரோஹித் சரஃபும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவர்களின் பிரபல தன்மையை கணக்கில் கொண்டு இந்தப் பட்டியலில் இவர்கள் இடம் பிடித்துள்ளனர். அபர்ணா பாலமுரளி, கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’, மலையாளத்தில் ‘கிஷ்கிந்தா காண்டம்’, ‘ருதிரம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here