பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

0
11

லஞ்​சப் பணம் பெற்​ற​தாக எழுந்த குற்​றச்​சாட்​டில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்​டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்​தினர். சென்னை காவல் துறை​யில் உள்ள பாலியல் தடுப்​புப் பிரிவு இன்​ஸ்​பெக்​ட​ராக இருப்​பவர் ராஜலட்​சுமி.

இவர் குடும்​பத்​தோடு சென்னை திரு​மங்​கலம், வெல்​கம் காலனி​யில் வசித்து வரு​கிறார். நேற்று காலை 6 மணி​யள​வில் இவரது வீட்​டுக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீ​ஸார் சென்று திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

சுமார் 4 மணி நேர சோதனைக்​குப் பிறகு சில ஆவணங்​களை கையோடு எடுத்​துச் சென்​ற​தாக கூறப்​படு​கிறது. முன்​ன​தாக சொத்து விவரங்​கள், பண விவ​காரங்​கள் தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர், ராஜலட்​சுமி​யிடம் சிறிது நேரம் விசா​ரணை நடத்​தினர்.

தேவைப்​பட்​டால் விசா​ரணைக்கு அழைப்​ப​தாக கூறிச் சென்​றனர். சோதனை​யின் முடி​வில் எவ்​வளவு பணம், ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டது எந்த விவரங்​களை​யும் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வெளி​யிட​வில்​லை.

இன்ஸ்பெக்டர் ராஜலட்​சுமி மீது முறை​கேடு புகார்​கள் எழுந்​தன. குறிப்​பாக, பாலியல் தடுப்​புப் பிரி​வில் அதி​காரத்​தைத் தவறாகப் பயன்​படுத்​தி​யது மற்​றும் லஞ்ச விவ​காரங்​கள் தொடர்​பாக கிடைத்த ரகசி​யத் தகவல்​களின் அடிப்​படை​யில் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

காழ்ப்​புணர்ச்சி காரண​மாக​வும், சிலரின் தூண்​டு​தலின் பேரிலும் இந்த சோதனை நடத்​தப்​பட்​ட​தாக இன்ஸ்பெக்டர் ராஜலட்​சுமி தரப்​பில் விளக்​கம் அளிக்​கப்​பட்​டது. இச்​சம்​பவம் போலீஸ் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here