அரசுப் பணி தேர்வுக்கு கேள்வி தயாரிப்பில் மெத்தனம்: அண்ணாமலை கண்டனம்

0
46

டிஎன்​பிஎஸ்சி தேர்​வுக்கு கேள்வி தயார் செய்​வ​தில் கவனக்​குறைவுடன் செயல்​படு​வ​தாக தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: இளநிலை உதவி வரை​வாளர் பணிக்​கான டிஎன்​பிஎஸ்சி தேர்​வில், அய்யா வைகுண்​டர் குறித்த கேள்​வி​யின் ஆங்​கில மொழிபெயர்ப்​பில், முடிசூடும் பெரு​மாள் என்ற அய்யா வைகுண்​டரின் பெயர், ‘தி காட் ஆஃப் ஹேர்​கட்​டிங்’ (The God of Hair Cutting) என்று மொழிபெயர்க்​கப்​பட்​டுள்​ளது. கவனக்​குறை​வாக​வும், பொறுப்​பின்​றி​யும் மொழிபெயர்த்​தது கடும் கண்​டனத்​துக்​குரியது.

‘மக்​களை தேடி மருத்​து​வம்’ திட்​டத்​தின் சரி​யான கூற்​றுகளை கண்​டறிய​வும்’ என்ற கேள்விக்​கு, ‘2024-ம் ஆண்டு ஐ.நா. சபை​யிடம் இருந்து விருதை பெற்​றது’ என்​ப​தை, ‘இட் பெக்டு தி யூனைட்​டட் நேஷன்ஸ் அவார்​டு’ (It begged the United Nations Award) அதாவது, ‘யாசகம் எடுத்​தார்​கள்’ என்று மொழிபெயர்த்​துள்​ளனர்.

திமுக தலை​வர்​கள் காலம் கால​மாக, இல்​லாத விருதுகளை வாங்​கிய​தாக கூறிவரு​வ​தா​ல், கேள்வி தயாரித்​தவர்​களுக்கு குழப்​பம் ஏற்​பட்​டிருக்​கலாம். எனினும், அரசுப் பணி தேர்​வு​களுக்​கான கேள்வி​களை தயார் செய்​வ​தில் இது​போல கவனக்​குறை​வாக இருப்பதுதவறு.

தமிழக இளைஞர்​களின் எதிர்​காலத்தை திமுக அரசு கிள்​ளுக்​கீரை​யாக நினைப்​ப​தையே இது காட்​டு​கிறது. கோபாலபுரம் குடும்பத்தினர்​போல, எந்த தகு​தி​யும் இன்றி மேலே வர வேண்​டும் என்று நினைப்​பவர்​கள் அல்ல தமிழக இளைஞர்​கள். அரசுப் பணித் தேர்​வு​களுக்​காக கடுமை​யாக உழைக்​கும் அவர்​களை அவமானப்​படுத்​தும் போக்​கை, தி​முக அரசு இத்​துடன் நிறுத்​திக்​கொள்ள வேண்​டும்​. இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here