ஜவ்வாதுமலை சிவன் கோயிலில் பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுப்பு

0
16

திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாது​மலை வட்​டத்​தில் உள்ள கோவிலூர் கிராமத்​தில் பழமை​வாய்ந்த ஆதி சிவன் கோயில் உள்​ளது. இந்த கோயில் மூன்​றாம் ராஜ​ராஜசோழன் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இந்த சிவன் கோயில் கரு​வறை திரு​மூல​நாதர் சந்​நிதி மற்​றும் ராஜகோபுரம் உள்​ளிட்​டவை பல ஆண்​டு​களாக சிதிலமடைந்த நிலை​யில் இருந்​தன.

இந்​நிலை​யில் தமிழக அரசால் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, ரூ.2.49 கோடி மதிப்​பில் தற்​போது புனரமைப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதற்​கிடையே, திரு​மூல​நாதர் கரு​வறை​யில் கட்​டு​மானப் பணி மேற்​கொள்ள ஊழியர்​கள் நேற்று காலை பள்​ளம் தோண்​டிய​போது பள்​ளத்​திலிருந்த ஒரு சிறிய பானை​யில் 103 தங்க நாண​யங்​கள் இருந்​தன. உடனே இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதி​காரி​களுக்​குத் தகவல் கொடுத்​துள்​ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்​குச் சென்ற உதவி ஆணை​யர் சண்​முகசுந்​தரம், தங்க நாண​யங்​களைக் கைப்​பற்​றி, செயல் அலு​வலர் சிலம்​பரசனிடம் ஒப்​படைத்​தார். அவை பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த தங்க நாண​யங்​கள் எந்த காலத்​தைச் சேர்ந்​தது என்​பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here