நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நடிகருக்குப் பின்னால் செல்வது ஆபத்தானது. அறிவார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்சிக்கு பின்னால் ஓடுவது அசிங்கமானது.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 1.25 கோடி வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் தமிழ் சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.
கரூர் விவகாரத்தில் தவெக மாவட்டச் செயலாளர், பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? விசாரணை நடைபெறும் சூழலில், பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்துப் பேசுவது சரியா? பாஜக கூட்டணியில் சேர்ப்பதற்காகவே விஜய், ஆதவ் அர்ஜுனா விட்டு வைத்திருக்கிறார்கள். கூட்டணியில் விஜய் சேரவில்லை என்றால் வழக்கு பதிவு செய்வார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.














