Home தேசிய செய்திகள் நேபாள எல்லையில் பயண ஆவணமில்லாத அமெரிக்கர் கைது

நேபாள எல்லையில் பயண ஆவணமில்லாத அமெரிக்கர் கைது

0

உத்​தர பிரதேசத்​தின் மகா​ராஜ் கஞ்ச் மாவட்​டம், சோனாலி காவல் நிலைய எல்​லைக்​குட்​பட்ட நேபாள எல்​லை​யில் மத்​திய பாது​காப்பு படை​யினர் கடந்த சனிக்​கிழமை ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது நேபாள எல்​லைக்​குள் நுழைய முயன்ற ஒரு​வரை மடக்கிப் பிடித்​தனர். உ.பி. காவல் துறை​யிடம் ஒப்​படைக்​கப்​பட்ட அவரிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

இது குறித்து மகா​ராஜ்கஞ்ச் மாவட்ட கூடு​தல் காவல் கண்காணிப்பாளர் சித்​தார்த் கூறிய​தாவது: கைது செய்யப்பட்டவர் அமெரிக்​காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜோர்​டான் பிர​வுன் என தெரியவந்துள்ளது.

அமெரிக்க கடற்​படை முன்​னாள் அதி​காரி என்றும் கூறுகிறார். அவரிடம் முறை​யான அடை​யாள மற்​றும் பயண ஆவணங்​கள் எது​வும் இல்​லை. சுற்​றுலா விசா​வில் தாய்லாந்து சென்​ற​ அவர், அங்கு தனது பாஸ்​போர்ட்டை இழந்ததாக​வும் கூறி​னார்.

பிறகு கடல் வழி​யாக இலங்கை சென்​றடைந்​து, அங்​கிருந்து கடந்த 2025 நவம்​பர் 2ம் தேதி கடல் மார்க்​க​மாக கோவா வந்து அங்கு தங்கி​யுள்​ளார். இதன் மூலம் பாஸ்​போர்ட் இல்​லாமல் சுமார் 7 மாதங்​கள் அவர் இந்​தி​யா​வில் கழித்​துள்​ளார். கோவா​வில் இருந்து பெங்​களூரு​வுக்​கும் பிறகு அங்​கிருந்து நேபாளத்​திற்​குள் நுழை​யும் நோக்​கத்​தில் சோனாலி எல்​லைக்​கும் வந்​துள்​ளார்.அவர் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version