காலம் கடந்து திமுகவுடன் கூட்டணி: பிரேமலதா வருத்தம்

0
18

தி​முக – தேமு​திக கூட்​டணி தாமதமாக அமைந்​துள்​ளது. ஏன், இந்த கூட்​டணி இவ்​வளவு நாளாக அமைய​வில்லை என நான் வருத்​தப்படு​கிறேன் என்று தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா பேசி​யுள்​ளார்.

விருத்​தாசலத்​தில் திமுக மேற்கு மாவட்​டச் செய​லா​ள​ரும் அமைச்​சரு​மான சி.வெ. கணேசன் தலை​மை​யில் மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி கட்​சி​யின் செயல்​வீரர்​கள் கூட்​டம் நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில் விருத்​தாசலம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா பேசி​ய​தாவது: விருத்​தாச்​சலம் விருத்​தகிரிஸ்​வரர் கோயில் சாதாரண கோயில் அல்ல. பழைமை வாழ்ந்த கோயில் 2006-ம் ஆண்டு முதன்​முறை​யாக கேப்​டன் ஜெயித்​தார். நான் அப்​போ​தி​லிருந்து கேப்​ட​னுக்கு நிழலாகவே இருந்து வந்​தேன். எங்​களது திரு​மணத்தை கருணாநி​தி​யும் மூப்​பனாரும் முன் நின்று நடத்தி வைத்​தனர்.

கருணாநிதி குடும்​பத்​துக்​கும் எங்​கள் குடும்​பத்​துக்​கும் அவ்​வளவு பெரிய நட்பு உள்​ளது. விஜய்​காந்த் மேல் கருணாநி​திக்கு அவ்​வளவு பாசம் இருந்​தது.

இப்​போது எங்​கள் கட்சி மாவட்​டச் செய​லா​ளர்​கள் விரும்​பியபடி திமுக​வுடன் கூட்​டணி வைத்​துள்​ளோம். இந்​தக் கூட்​டணி 210 தொகு​தி​களில் வெல்​லும்.

மு.க.ஸ்​டா​லின் 2-வது முறை​யாக முதல்​வ​ராக பதவி​யேற்​பார். திமுக​வுடன் தேமு​திக கூட்​டணி அமைக்க வேண்​டும் என்​பது பல ஆண்​டு​களாக நினைத்த விஷ​யம். விஜய​காந்த்​தும் கருணாநி​தி​யும் இருந்​த​போதே கூட்​டணி அமைந்​திருக்க வேண்​டும். இப்​போது​தான் வழி பிறந்​திருக்​கிறது. தாமத​மாக திமுக – தேமு​திக கூட்​டணி அமைந்​துள்​ளது. ஏன், இந்த கூட்​டணி இவ்​வளவு நாளாக அமைய​வில்லை நான் வருத்​தப்​படு​கிறேன். இன்று குடும்ப உறவு கூட்​டணி உறவாக மாறி இருக்​கிறது.இவ்​வாறு அவர் பேசி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here