ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் இறு​திச் சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச்!

0
51

ஆஸ்​திரேலிய ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்னிஸ் போட்​டி​யின் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திச் சுற்​றுக்கு ஸ்பெ​யின் வீரர் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பிய வீரர் ஜோகோ​விச் ஆகியோர் முன்​னேறி​யுள்​ளனர். அரை இறுதி ஆட்​டத்​தில் ஐந்​தரை மணி நேர போராட்​டத்​துக்​குப் பின்​னர் அல்​க​ராஸ் வெற்றி கண்​டார்.

ஆண்​டின் முதல் கிராண்ட்​ஸ்​லாம் போட்​டி​யான ஆஸ்திரேலிய ஓபன் டென்​னிஸ் போட்டி மெல்​பர்​னில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற முதலா​வது அரை இறு​திப் போட்​டி​யில் முதல் நிலை வீர​ரான கார்​லோஸ் அல்​க​ராஸும், 3-ம் நிலை வீர​ரான அலெக்​சாண்​டர் ஜிவேரே​வும்​(ஜெர்​மனி) மோதினர். இதில் அல்​க​ராஸ் 6-4, 7-6(5), 6-7(3), 6-7(4), 7-5 என்ற செட் கணக்​கில் போராடி வெற்றி கண்​டார்.

முதல் இரண்டு செட்​களில் சிறப்​பாக விளை​யாடி வென்றார் அல்​க​ராஸ். ஆனால் அடுத்த 2 செட்​களி​லும் ஜிவேரேவ் சுதா​ரித்து விளை​யாடி கைப்​பற்​றி​னார். இதையடுத்து வெற்​றிக்​குத் தேவை​யான கடைசி செட்டை 7-5 என்ற கணக்​கில் அல்​க​ராஸ் கைப்​பற்​றி​னார். 5 மணி நேரம் 27 நிமிடங்​கள் வரை இந்​தப் போட்டி நீடித்​தது. கடைசி செட்​டை வென்ற உற்​சாகத்​தில் அல்​க​ராஸ், டென்னிஸ் மைதானத்​திலேயே படுத்​து​விட்​டார்.

ஆஸ்​திரேலிய ஓபன் அரை​யிறு​தி​யில் மிக நீண்ட நேரம் நடை​பெற்ற போட்​டி​யாக இந்​தப் போட்டி மாறி​யுள்​ளது. இந்த வெற்​றி​யின் மூல​மாக நான்கு கிராண்ட்​ஸ்​லாம் போட்​டிகளின் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறிய இளம் வீரர் என்ற சாதனையை அல்​க​ராஸ் படைத்​துள்​ளார். மெல்பர்​னில் நடந்த போட்​டிகளி​லேயே நீண்ட நேரம் நடந்த 3-வது போட்​டி​யாக​வும், அரை​யிறு​தி​யின் வரிசையில் முதல் இடத்​தில் உள்ள போட்​டி​யாக​வும் இடம்​பெற்​றுள்​ளது.

நடப்பு சாம்பியன் தோல்வி

2-வது அரை இறு​திப் போட்​டி​யில் 2-ம் நிலை வீர​ரான ஜன்னிக் சின்​னரும்​ (இத்​தாலி), 4-ம் நிலை வீர​ரான நோவக் ஜோகோ​விச்​சும் மோதினர். இந்​தப் போட்​டி​யில் ஜோகோவிச் 3-6, 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்​கில் நடப்பு சாம்பியனான ஜன்​னிக் சின்​னரை வீழ்த்தி​னார்.

சிறப்​பாக விளை​யாடி முதலா​வது செட்​டைக் கைப்​பற்​றிய ஜன்​னிக் சின்​னர் 2-வது செட்டை ஜோகோ​விச்​சிடம் இழந்தார். ஆனால் 3-வது செட்​டில் சுதா​ரித்து விளை​யாடி 6-4 என்று சின்​னர் கைப்​பற்​றி​னார்.

ஆனால், 4, 5-வது செட்​களில் அபார​மாக விளை​யாடிய ஜோகோ​விச் 2 செட்​களை​யும் கைப்​பற்றி அரை இறு​தி​யில் வெற்றி கண்​டார். இறு​திப் போட்​டி​யில் முதல் நிலை வீரரான கார்​லோஸ் அல்​க​ராஸும், 4-ம் நிலை வீர​ரான ஜோகோ​விச்​சும் வரும் பிப்​ர​வரி 1-ம் தேதி நாளை மோதவுள்​ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here