வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை நீக்க மத்திய அரசுக்கு அஜித் பவார் கோரிக்கை

0
289

வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் விளையும் வெங்காயம் நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் சந்தைக்கு பெருமளவு வருவதாலும் குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாததாலும் வெங்காயத்தை மிகக் குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டியுள்ளது. ஏற்றுமதி வெங்காயம் மீது 20 சதவீத வரி விதிக்கப்படுவதால் சர்வதேச சந்தையில் இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியவில்லை. எனவே 20 சதவீத ஏற்றுமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அஜித் பவார் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here