அழகியமண்டபம்: சாலை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் மறியல்

0
218

தக்கலை அருகே உள்ள அழகிய மண்டபத்திலிருந்து வேர் கிளம்பி செல்லும் சாலை பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு மிக மோசமான நிலையில் உள்ளது. தற்போது குடிநீர் திட்டங்களுக்கு குழாய் பதிக்க மேலும் தோண்டப்பட்டதால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் தற்போது தொடர் மழை என்பதால் சாலையில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி கடமலைக்குன்று பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, நேற்று (14-ம் தேதி) மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. 

அப்போது மேகமண்டபம் நோக்கி நடந்தது மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பைக்கில் சென்ற அஸ்வின் என்பவர் அந்த சாலை பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே காங்கிரசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆத்திரமடைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து டிஎஸ்பி தலைமையிலான போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இன்று 15ஆம் தேதி காலை 10 மணிக்கு சாலை சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here