இந்திய விமானப்படையின் இலகு ரக பயிற்சி விமானம் ஒன்று உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. அதில் 2 விமானிகள் பயணம் செய்தனர். இது பொதுவாக பயிற்சி மற்றும் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும்.
சங்கமம் பகுதியில் இந்த விமானம் நேற்று பறந்து கொண்டிருந்தபோது, அதில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள கே.பி. கல்லூரி அருகே உள்ள குளத்தில் பயிற்சி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 2 விமானிகளும், போலீஸார், தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.



