சென்னை மாவட்டத்தில் கட்சி அமைப்புரீதியாக கள ஆய்வு பிப்.4-ல் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக கிளை, வார்டு, வட்டம் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் கள ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து, விவரங்களை கட்சி தலைமைக்கு சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் கட்சி அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் வரும் 4-ம் தேதி முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.செம்மலை, கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர், ப.மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.சிங்காரம் ஆகியோர் கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.














