திமுகவுக்கு ‘செக்’ வைக்கவே அதிமுக வழக்கு: பழனிசாமி விளக்கம்

0
7

எஸ்​ஐஆர் விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக தவறான தகவலை பதிய வைத்​தால் அதை சரிசெய்​யவே அதி​முக வழக்​கில் இணைந்​துள்​ளது என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

கோவை விமான நிலை​யத்​தில் பழனி​சாமி நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: கோவை​யில் மக்​கள் நடமாட்​டம் உள்ள பகு​தி​யில் மாணவி கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டுள்​ளார். திமுக ஆட்​சி​யில் பெண்​கள், மாணவி​கள், சிறுமிகளுக்கு பாது​காப்பு இல்​லை. திமுக ஆட்​சி​யில் பாலியல் வன்​கொடுமை​கள் சர்​வ​சா​தா​ரண​மாக நடக்​கின்​றன. சட்​டம் ஒழுங்கு முற்​றி​லு​மாக சீர்​குலைந்​துள்​ளது. திமுக ஆட்​சி​யில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்​ட​தாக​வும், அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்​த​தாக​வும் திமுக​வின் சமூக நலத்​துறை அமைச்​சரே பெருமையாகப் பேசி​யுள்​ளார். ஒரு திறமையற்ற, பொம்மை முதல்​வரிடம் காவல்​துறை இருப்​ப​தால், இப்​படி​யான பாலியல் வன்​கொடுமை​கள் நடக்​கின்​றன.

21 ஆண்​டு​களுக்கு பிறகு தமி​ழ​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் நடத்​தப்​படு​கிறது. இதற்கு முன்பு 8 முறை இந்த திருத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. வாக்​காளர் பட்​டியலில் இறந்​தவர்​கள், வீடு மாறி சென்​றவர்​கள் பெயர்​கள் அதி​கள​வில் இடம்​பெற்​றுள்​ளது. இது​போல உள்​ளவர்​களை நீக்​கி, தகு​தி​யான​வர்​களை இடம்​பெற செய்​வதே எஸ்​ஐஆர்.

ஆனால், திமுக​வும், அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளும் எஸ்​ஐஆர் என்​றாலே அலறுகி​றார்​கள். காலக்​கெடு போதாது என்​கி​றார்​கள். இதற்​காக பிஎல்​ஓக்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர், ஒரு மாதம் காலக்​கெடு வழங்​கப்​பட்​டுள்​ளது. 300 வீடு​கள் இருக்​கும் ஒரு பாகத்​தில் வாக்​காளர் படிவம் கொடுக்க 8 நாட்​கள் போதும். எனவே இதில் கால​தாமதம் ஏற்பட வாய்ப்பே இல்​லை. எஸ்​.ஐ.ஆர் குறித்து தவறான செய்தி பரவி வரு​கிறது. தகு​தி​யான வாக்​காளர்​கள் பட்​டியலில் இடம்​பெற வேண்​டும் என்​பதே எஸ்​.ஐ.ஆரின் நோக்​கம். இறந்​தவர்​கள், வீடு மாறி சென்​றவர்​களை நீக்​கக்​கூ​டாது என திமுக​வினர் சொல்​கின்​ற​னர். ஏனெனில் தகு​தி​யான​வர்​கள் மட்​டும் இடம்​பெற்​றால் கள்ள ஓட்டு போட​முடி​யாது என திமுக​வினர் இதனை எதிர்க்​கி​றார்​கள்.

எஸ்​ஐஆரை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக வழக்கு தொடர்ந்​துள்​ளது. விசா​ரணை​யின்​போது நீதி​மன்​றத்​தில் திமுக தவறான தகவலை பதிவு செய்​தால் அதை செய்​யவே வழக்​கில் அதி​முக​வும் இணைந்​துள்​ளது. நீதி​மன்​றத்​தில் தவறான தகவலை தெரிவிக்​காமல் இருக்க திமுக​வுக்கு ‘செக்​’வைக்​கவே நாங்​களும் வழக்​கில் இணைந்​துள்​ளோம். திமுக தவறான தகவல்​களை சொன்​னால், எங்​கள் தரப்​பில் சரி​யான தகவல்​களை நீதி​மன்​றத்​தில் தெரி​விப்​போம்.

சென்​னை​யில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நிர்​வாகியை முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார் பிடித்​துக்​கொடுத்​தார். வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்​தில் தவறு இருந்​தால் சுட்​டிக்​காட்​டுங்​கள். தகு​தி​யான​வர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற வேண்​டும் என்​ப​தற்​காகவே நாங்​கள் எஸ்​ஐஆரை ஆதரிக்​கி​றோம்.

என் குடும்​பத்​தினர் யாரும் அரசி​யலில் தலை​யிடு​வது இல்​லை. என் மகனையோ, மரு​மக​னையோ அதி​முக ஆட்​சி​யின்​போதோ அல்​லது கட்​சி​யிலோ யாராவது பார்த்​திருக்​கிறீர்​களா? இதற்கு முன் கட்​சியி​லிருந்து வில​கிய​வர்​கள் குடும்ப அரசி​யல் குற்​றச்​சாட்டை என் மீது கூறி​னார்​களா? என் மீது வேறு குற்​றச்​சாட்​டு​கள் கூற முடி​யாத​தால் குடும்ப அரசி​யல் என்று செங்​கோட்​டையன் கூறுகி​றார். தமி​ழ​கத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு அதி​முக​தான் தலைமை ஏற்​கும் என்று அமித்ஷா ஏற்​கெனவே தெளிவுபடுத்​தி​விட்​டார். முதல்​வர் வேட்​பாளர் இபிஎஸ் என்​றும் பாஜக கூறி​விட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here