அகமதாபாத் விபத்து: விமானி திட்டமிட்டே எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்தியதாக இத்தாலி பத்திரிகை வெளியிட்ட செய்தியால் பரபரப்பு

0
18

அகம​தா​பாத்​ ஏர் இந்​தியா விமான விபத்​து தொழில்​நுட்​பக் கோளாறால் ஏற்​பட​வில்லை. விமானி திட்​ட​மிட்டு இன்ஜினுக்கு செல்​லும் எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்​தியுள்ளார் என்று இத்​தாலிய பத்​திரி​கை​யில் பரபரப்​பான செய்​தி​யொன்று வெளி​யாகி​யுள்​ளது.

இதுகுறித்து இத்​தாலி​யின் கொரியர் டெல்லா செரா நாளிதழில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் ஏர் இந்தியா 171 விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். இது குறித்து விரி​வான விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அதில், இந்த விபத்து தற்செய​லானது அல்ல திட்​ட​மிட்ட செயல் என தெரிய ​வந்​துள்​ளது.

விமானத்​தின் எரிபொருள் கட்​டுப்​பாட்டு சுவிட்​சுகள் மேனுவலாக ‘ஆஃப்’ செய்​யப்​பட்​டது கண்​டறியப்​பட்​டது. இது இயந்​திரக் கோளாறல்ல என்​றும், மனித தலை​யீட்​டால்​தான் இந்த விபத்து நிகழ்ந்​தது என்​றும் அமெரிக்க நிபுணர்​கள் கருதுகின்​றனர். இவ்வாறு அந்த நாளிதழில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

விமானி சுமித் சபர்​வால் எரிபொருள் சுவிட்​சுகளை அணைத்​திருக்​கலாம் என சந்​தேகிக்​கப்​படு​கிறது. அவர் மன அழுத்​தத்​தால் பாதிக்​கப்​பட்​டிருந்​த​தாக விசா​ரணை அறிக்கை கூறுகிறது.

இந்த விமான விபத்து தொடர்​பான விசா​ரணை பிரிவு வெளி​யிட்ட முதற்​கட்ட அறிக்​கை​யில், “காக்​பிட் உரை​யாடல்​கள் குறித்த தகவல்​கள் இடம்​பெற்​றிருந்​தன. அதில், ஒரு விமானி “ஏன் எரிபொருளை நிறுத்​தி​னாய்?” எனக் கேட்க, மற்​றொரு​வர் “நான் அவ்​வாறு செய்​ய​வில்​லை” என்று பதிலளிப்​பது பதி​வாகி​யிருந்​தது.

இந்தியா நிராகரிப்பு: ​வி​மான விபத்து புலா​னாய்வு அமைப்பு (ஏஏஐபி) கூறுகை​யில், “இத்​தாலி ஊடகத்​தின் கருத்​துகள் தவறு. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசா​ரணை நடந்து வரு​கிறது. எனவே, இந்த விவ​காரத்​தில் இன்​னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்​லை.

சரி​பார்க்​கப்​ப​டாத இந்த செய்தி பொது​மக்​களிடையே பதட்டத்தை ஏற்​படுத்​தும் என்​பதுடன் விசா​ரணை​யின் நேர்மையை குறைம​திப்​புக்கு உட்​படுத்​தும் அபா​யம் உள்ளது” என தெரி​வித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here