சீனியர் டிவிஷன் கால்பந்தில் ஏஜிஓஆர்சி வெற்றி

0
17

சென்னை கால்பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் நடைபெற்று வரு​கிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஏஜிஓஆர்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணியை வீழ்த்தியது. ஏஜிஓஆர்சி அணி சார்பில் ரக்சில் (2-வது நிமிடம்), ஹலிசோ (8-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

வருமான வரித்துறை அணி சார்பில் நரேஷ், 48-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். மற்றொரு போட்டியில் தாவூத் மெமோரியல் எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆக்டோபஸ் மரைன் எஃப்சி அணியை தோற்கடித்தது. தாவூத் அணி சார்பில் வசந்த் குமார் 31, 37, 57-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோலடித்தார். ஆக்டோபஸ் அணி சார்பில் தனிஷ் 90+1-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here