ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடர், டெஸ்ட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான அணியில் அறிமுக வீரர்களாக பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் சர்வதேச ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் அறிமுக வீரர்களாக பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் டெஸ்ட் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, நித்திஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல்(துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ரிஷப் பந்த், தேவ்தத் படிக்கல், நித்திஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜுரல்.
