இந்திப் படங்களில் நடித்து வரும் நர்கிஸ் ஃபக்ரி, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இந்தியில் ‘மெட்ராஸ் கபே’, ‘ராக் ஸ்டார்’, ‘ஹவுஸ்புல்-3’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரஷாந்துடன் ‘சாகசம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இவர் காஷ்மீரில் பிறந்த அமெரிக்கத் தொழிலதிபர் டோனி என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் ஒருவர் புதிதாக வந்திருப்பதாகவும் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்த நர்கிஸ், அவர் பற்றிய விவரத்தைச் சொல்ல மறுத்திருந்தார்.