கணவரை பிரிந்​தார் நடிகை ஹன்சிகா: விவாகரத்து வழங்கியது மும்பை நீதிமன்றம்

0
17

நடிகை ஹன்சிகா மோத்​வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்​டாரியா என்ற தொழில​திபரை காதலித்து திரு​மணம் செய்​து​கொண்​டார். சோஹைல் ஏற்​கெனவே திரு​மண​மாகி விவாகரத்து ஆனவர். இவர்​கள் திரு​மணம் ஜெய்ப்​பூரில் பிரம்​மாண்​ட​மாக நடை​பெற்​றது.

திரு​மணத்​துக்​குப் பிறகு சோஹைல் வீட்​டில் குடியேறி​னார் ஹன்​சி​கா. கூட்​டுக் குடும்​ப​மாக வாழ்​வ​தில் ஹன்​சிகா​வுக்​கும் அவர் கணவருக்​கும் கருத்​து​வேறு​பாடு ஏற்​பட்​ட​தாகக் கூறப்​பட்​டது. சிறிய பிரச்​சினைக்கு கூட இரு​வருக்​கும் வாக்​கு​வாதம் எழுந்​த​தாக​வும் இதையடுத்து 2024-ம் ஆண்டு முதல் இரு​வரும் பிரிந்து வாழ்ந்து வரு​கின்​றனர்.

அவர்​களின் குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பர்​கள் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்​தனர். அது பலனளிக்​காத​தால், மும்பை பாந்த்​ரா​வில் உள்ள குடும்ப நல நீதி​மன்​றத்​தில் விவாகரத்​துக் கோரி பரஸ்பரம் மனு தாக்​கல் செய்​தனர். இம்​மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம் இரு​வருக்​கும் விவாகரத்து வழங்​கியுள்​ளது. இந்த வழக்​கில் ஹன்சிகா ஜீவ​னாம்​சம் கோர​வில்லை என்று கூறப்​படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here